விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காதுவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், கடைசி விவசாயி ஆகிய படங்கள் டிசம்பரில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் என்ன அண்மையில் கூட நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் ஆகின. வாரம் வாரம் விஜய் சேதுபதி படங்கள் வந்துவிடும். குறைந்தபட்சம் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களாவது வந்துவிடும் என்ற அளவிற்க்கு தான் விஜய் சேதுபதி தனது ரிலீஸ் லைன் அப்பை வைத்து இருப்பார்.
தற்போது மீண்டும் அதே போல , டிசம்பர் மாதம் வரிசைகட்டி தனது படங்களை களமிறக்க உள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காதுவாக்குல ரெண்டு காதல். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது.
அடுத்து, நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படமும் டிசம்பரில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. அதே போல, மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படமும் டிசம்பரில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.
மேற்கூறிய இரண்டு படங்களின் ரிலீஸ் பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…