தந்தை வில்லனாக மிரட்ட…ஹீரோவாக கலக்க வரும் விஜய் சேதுபதி மகன்!

Vijay Sethupathi Son

தமிழ் சினிமாவில் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ஒரு கலக்கு கலக்கி அனைவரும் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில். அவருடைய மகன் சூர்யா சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாக விருக்கும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு, ‘பீனிக்ஸ் வீழான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் இந்தியன் 2, ஷாருக்கானின் ஜவான், சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜான் மற்றும் விஜய்யின் பிகில் போன்ற திரைப்படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளை உருவாக்கிய ஸ்டண்ட் இயக்குனர் அன்ல் அரசு தான் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த திரைப்படம் ஒரு மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தை பிரேவ் மேன் பிக்சர்ஸ் பேனரில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கிறார்.

சீனு ராமசாமி டார்ச்சர்? நான் எதையும் மறக்கவில்லை! மௌனம் களைத்த மனிஷா யாதவ்!

முன்னதாக, நானும் ரவுடி தான், சிந்துபாத் போன்ற படங்களில் விஜய் சேதுபதி உடன் நடித்திருந்த விஜய் சேதுபதி மகன் சூர்யா, விரைவில் வெளிவரவிருக்கும் விடுதலை 2 படத்திலும் நடித்து உள்ளார். தற்போது ஹீரோவாக களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

த்ரிஷா விவகாரம்: முன்ஜாமின் கேட்ட மன்சூர் அலிகான்.! உத்தரவை தள்ளிவைத்த நீதிபதி.!

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த விஜய் சேதுபதி பாலிவுட் வரை சென்று வில்லனாக கலக்கி உள்ளார். அது போல், அவரது மகன் எந்த அவதாரத்தில் கலக்க போகிறார் என்றுபொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS FEB 27
tn rain
Rohit sharma
vijay yesudas and kj yesudas
lokesh and rajini coolie
Tamilnadu cm mk stalin (3)
Waqf Board - Parliament session