விஜய் சேதுபதி எனக்காகவே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் சுதந்திர போராட்ட வீரரான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ‘ நடிப்பில் பிஸியான விஜய் சேதுபதி எனக்காகவே படத்தில் நடிக்க ஒப்பு கொண்டார்.” என புகழாரம் சூட்டியுள்ளார்.