கோட் : நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 150 கோடிக்கு மேல் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பார் யுவன் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, பிரசாந்த் தியாகராஜன், பிரபு தேவா, அஜ்மல் அமீர், பிரேம்கி, மோகன், சினேகா, யோகி பாபு, ஜெய்ராம், வத்வா கணேஷ், லைலா, வைபவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடோக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
படம் வரும் செப்டம்பர் மாதம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து படத்தின் எடிட்டிங் வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு விஜய் கொடுத்த விமர்சனம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
படத்தின் முதல் பாதியை எடிட் செய்துவிட்டு அதனை படக்குழு விஜயிடம் போட்டு காமித்துள்ளனர். அதனை பார்த்து மெய்சிலிர்த்து போன விஜய் ”தெறிக்குது” என்று தனது விமர்சனத்தை கூறியுள்ளார். விஜய் இப்படி கூறியுள்ளதாக வெளியான தகவல் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, கோட் படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் மூன்றாவது பாடலும் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…