விஜய் – ராஷ்மிகா செம குத்தாட்டம்…வெளியானது வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல்.!

Published by
பால முருகன்

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். நேற்று முன்தினம் படத்தின் முதல் பாடல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என ப்ரோமோவுடன் அறிவிக்கப்பட்டிருந்தது. ப்ரோமோவில் பாடலை விஜய் பாடியதும், பாடலின் பெயர் ‘ரஞ்சிதமே’ என்றும் தெரிய வந்தது.

இந்த நிலையில், அந்த அறிவிப்பை தொடர்ந்து ரஞ்சிதமே பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடலில் விஜயின் குரலும், தமனின் இசையும் காண்போர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதைபோல், சிறிய சிறிய காட்சிகளில் விஜய் – ராஷ்மிகா இணைந்து ஆடிய நடனமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பாடலை எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளார்.

பாடல் மிகவும் அருமையாக இருப்பதால் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பாடல் என்றாலே சமீபகாலமாக 24 மணி நேரத்திலே பல சாதனைகள் படைத்தது வருகிறது. இந்த பாடல் என்னென்ன சாதனைகள் செய்கிறது, எந்தெந்த பாடல்களின் சாதனைகளை முறியடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago