சிட்டுவை ஓடி சென்று தூக்கிய விஜய்! வைரலாகும் ‘கியூட்’ வீடியோ!

vijay cute video

லியோ திரைப்படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்த பிரபலங்களுக்கு எல்லாம் வேற லெவலில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்றே கூறலாம். அதற்கு காரணம் என்றால் லியோ விஜய் திரைப்படம். விஜய்க்கு இப்போது இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அவருடன் நடிக்கும் பிரபலங்களும் அடுத்ததாக படங்களில் நடிக்கவும் வாய்ப்பு குவிந்து வருகிறது.

அதைப்போல, அவருடன் நடிக்கும் பிரபலங்களுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவும் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை மடோனா, விஜய்க்கு மகளாக சிட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்த இயல் ஆகியோருக்கு எல்லாம் வேறு மாதிரி வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் இவர்களுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் இவர்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய்யும் படத்தில் மட்டுமின்றி இயலை தன்னுடைய நிஜ பொண்ணு போல நினைத்து அவர் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். அதற்கு உதாரணமாக லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் விஜய் லியோ பார்த்திபனாக மாறி நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

மேடையில் பேசிக்கொண்டிருந்த இயல் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஜய்யை மிஸ் செய்வதாக கூறினார். இதனை கேட்டுக்கொண்டிருந்த நடிகர் விஜய் வேகமாக ஓடி சென்று பார்த்திபனாக மாறி இயலை தூக்கி கொஞ்சினார். பிறகு அன்புடன் விஜய்க்கு இயல் கன்னத்தில் முத்தம் கொடுக்க விஜய்யுடம் அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

இது தொடர்பாக அழகான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் தளபதி மனசு தங்கம் தான் என புகழ்ந்து பேசி வருகிறார்கள். மேலும், லியோ திரைப்படம் வெளியான 14 நாட்களில் உலகம் முழுவதும் 588 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai