இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில். லியோ படத்தின் அப்டேட் எப்போது தான் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று படக்குழு படத்தின் தெலுங்கு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு இருந்தது. போஸ்டரில் விஜய் மிகவும் மாஸான லுக்கில் அமைதியாக நின்றுகொண்டு இருந்தார். அவருக்கு கீழே காஷ்மீரில் உள்ள காட்டில் இருந்து விஜய் ஓடுவது போல காட்சியும் இடம்பெற்று இருந்தது. அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள ரகசியம் பற்றி தற்போது காணலாம்.
லியோ போஸ்டரில் மறைந்துள்ள ரகசியங்கள்
நேற்று வெளியான லியோ போஸ்டரில் 2 விஜய் படங்கள் இடம்பெற்று இருந்தது. ஒரு விஜய் மிகவும் அமைதியாகவும், ஒரு விஜய் வேகமாக ஓடி வருவது போலவும் கட்டப்பட்டு இருந்தது. அதில் keep calm and avoid the battle என்ற வசனமும் இடம்பெற்று இருந்தது. அந்த வசனத்துக்கு ஆர்த்தம் என்னவென்றால், அமைதியாக இருந்தால் சண்டையை தவிர்க்கலாம் என்பது தான்.
எனவே, காஷ்மீரில் தனது குடும்பத்துடன் விஜய் அமைதியாக வாழ்ந்து வருகிறாராம். அந்த சமயத்தில் மிகவும் அமைதியாக சண்டைகள் வந்தால் கூட அதனை பொறுத்து போய் அமைதியாக இருக்கவேண்டும் படத்தில் அப்படி தான் இருக்கிறார் என்பதை போஸ்டர் குறிக்கிறது.
கீழே ஓடி வரும் விஜய் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை தாங்காமல் சண்டைக்கு செல்வது போல தெரிகிறது. இதைப்போல விஜய் பிறந்த நாள் அன்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பார்த்தீர்கள் என்றால் அதில் விஜய் மிகவும் ஆக்ரோஷத்துடன் ஒருவரை தாங்குவார். எனவே, இதனையும் நேற்று வெளியான போஸ்டரையும் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் சிறிய வயதில் அடி தடி என ரவுடி போல் வாழ்ந்துகொண்டிருக்கும் விஜய் அமைதியாக காஷ்மீர் சென்று வாழ்கிறார். அதன் பிறகு மீண்டும் எதற்காக பிரச்னையில் இறங்குகிறார் என்பது கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…