Vijay Makkal Iyakkam [File Image]
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அண்மைய காலமாக சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்கள்ளின் பிறந்தநாள் தினத்தன்று அவர்களின் சிலைகளுக்கு தனது நிர்வாகிகளை மாலை போட வைப்பதில் இருந்த, முக்கிய தலைவர்களாக இருக்கும் அன்புமணி ராமதாஸ், சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய்.
தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நேற்று திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நடிகர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை நடத்திய விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவா?
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் கட்சியாக பதிவு செய்யப்படும் என நடிகர் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், வரும் பிப்ரவரி மாதம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு ஒரு பக்கம் தகவல் வெளியாக்கினாலும், விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவிக்க உள்ளாரா? இல்லையென்றால், அரசியல் குறித்து அதிகாரபூர்வ நுழைவை அறிவித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தளுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில், கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…