இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதிஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த கடந்த 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி, இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
விமர்சனங்கள் எப்படி வந்தாலும். படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்று விட்டது என்றே கூறவேண்டும். ஆம், உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் விஜய் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட பலரை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குனர் நெல்சன் தனது ட்வீட்டர் பக்கத்தில் விருந்து சாப்பிடும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஒரு அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…