வர போகும் விஜயின்”சர்கார்க்கு இப்போதே கேரள ரசிக பட்டாளம்” செஞ்சத பாருங்க…!!
நடிகர் விஜய் ஏ ஆர் முருகதாஸ் இணையும் இந்த படத்திற்கு சர்க்கார் என்று பெயரிட்டனர்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருப்பது இந்தப்படம்தான்.இன்னும் இரண்டு நாட்களில் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளது.
இந்தநிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் பட்டாளம் இப்பொழுதே சர்கார் ரிலீஸுக்கு தயாராகி விட்டனர்.
அதன் முன்னோடியாக இப்போதே அவர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் பிரிண்ட் செய்து விநியோகித்துள்ளனர்.தமிழ்நாட்டிற்கு இணையாக கேரளாவிலும் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
DINASUVADU