கட்சி என்றால் என்ன? அந்த பிரபலத்திடம் அரசியல் கற்றுக்கொண்ட விஜய்!
சென்னை : விஜய்க்கு அரசியல் என்றால் என்ன என்பதை நான் தான் கற்றுக்கொடுத்தேன் என பிரபலம் ஒருவர் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இப்போது அவர் அரசியல் கட்சியை தொடங்கி இருந்தாலும் கூட, ஆரம்ப காலத்தில் அரசியல் பற்றி தெரியாமல் விஜய் கட்சி என்றால் என்ன என்று ஒரு பிரபலத்திடம் கேட்டு தெரிந்துகொண்டாராம்.
அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை விஜய்யுடன் சிவகாசி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நடிகர் ஜெயமணி தான். இந்த சிவகாசி படத்தில் நடிக்கும்போது கிட்டத்தட்ட 40 நாட்கள் விஜய் மற்றும் ஜெயமணி இருவரும் ஒன்றாக இருந்தார்களாம். அப்போது விஜய் ஜெயமணியிடம் அண்ணா நீங்கள் அரசியல் கட்சியில் இருக்கிறீர்களா? உங்களுக்கு அரசியல் பத்தி தெரியுமா? என்று கேட்டாராம்.
அப்போது தான் விஜய்க்கு ஜெயமணி அரசியல் என்றால் என்ன என்பதை பற்றி சொல்லிதந்தாராம். மாவட்ட செயலாளர், மாநில செயலாளர், என இருக்கிறார்கள். என்று விவரமாக ஆரம்ப காலத்தில் விஜய்க்கு அரசியல் என்றால் என்ன என்று சொல்லி கொடுத்தாராம். இந்த தகவலை ஜெயமணியே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஜெயமணி ” நான் இதனை பெருமைக்காக சொல்லவேன் என்று நினைக்கவேண்டாம். விஜய்க்கு அரசியல் சொல்லி கொடுத்தது நான் தான். இதனை நான் சொல்வதால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆரம்ப காலத்தில் அவர் என்னிடம் கேட்டு தான் அரசியல் என்றால் என்ன என்பதனை கற்றுக்கொண்டார். தம்பி விஜய் அரசியல் வருவதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” எனவும் ஜெயமணி தெரிவித்துள்ளார்.