விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படமும், அஜித் நடித்துள்ள “துணிவு” திரைப்படமும், அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் துணிவு படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார், வாரிசு படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறது.
இதில், வாரிசு படத்தை தமிழகத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடுகிறது. எனவே, தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் கொடுக்கப்படும் என கூறப்பட்டது.
இதையும் படியுங்களேன்- இனிமேல் அந்த விஷயத்துக்கு நோ தான்… விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு.!
ஆனாலும், தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் படங்களுக்கு தான் அதிக திரையரங்குகளில் கொடுக்கப்படுகிறது. எனவே, இதனால் துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாகவும், வாரிசு படத்திற்கான போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவலும் ஒரு பக்கம் ஓடி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் ” தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக நடிகர் விஜய் இருக்கிறார். இது நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அவருக்கு அடுத்தது தான் அஜித் இருக்கிறது. அப்படி இருந்தும் தமிழகத்தில் துணிவு படத்திற்கு நிகரான திரையரங்கு வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை.
துணிவு படத்திற்கு உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், அதிக தியேட்டர்களை கொடுத்துவிட்டு வாரிசு திரைப்படத்திற்கு போதுமான திரையரங்குகளை கொடுக்க மறுக்கிறார்கள். இரண்டு படங்களுக்கு சமமான திரையரங்குகள் கொடுத்தால் நன்றாக இருக்கும். இது குறித்து சென்னை சென்று உதயநிதி ஸ்டாலினிடம் பேசப்போகிறேன்” என்று தில் ராஜூ கூறியுள்ளார். மேலும் தில் ராஜு தற்போது சென்னையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…