இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்க்கு மத்தியில் இந்த படம் கடந்த 13-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் பலர் நன்றாக இருப்பதாக கூறிவருகிறார்கள். ஆனால் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படி இருந்தும் விஜய் படம் என்பதால் வசூலில் கலக்கி வருகிறது.
அந்த வகையில், பீஸ்ட் திரைப்படம் வெளியான 2 நாட்களிலே உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படம் விஜய்க்கு 100 கோடியை கடந்த 9-வது திரைப்படமாக திகழ்கிறது. வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…