நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக அங்கு விஜய்யுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 14-ஆண்டுகளுக்கு பின்பு அவர் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளதால், அவரை காண ரசிகர்கள் கூட்டம் ஏரளமாக செல்வதும் அது தொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோஸ் இணையத்தை கலக்கி வருகிறது.
அந்த வகையில் ஒரு வீடியோவில், உங்கள் அன்பை பார்க்கும் போது, எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது என நடிகர் விஜய் எமோஷனலாக பேசியுள்ளார். கேரளாவில் ரசிகர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு 2 கண்கள் மாதிரி.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, இந்த 32 வருடங்களில் என்னை ஒரு நடிகனாக மட்டும் பார்க்காமல், உங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்ததற்கு நன்றி. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்கள் விஜய் தான்” எனக் கூறியுள்ளார்.
இத்தனிடயே, ரசிகர்களுடன் வீடியோ எடுத்துள்ள விஜய் அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டு, “எண்டே அணியத்திமார், அணியன்மார், சேட்டன்மார், சேச்சிமார் அம்மாமார் எல்லா மலையாளிகளுக்கும் எண்டே ஹ்ருதயம் நிறைஞ்ச நண்ணி’ என மலையாளத்தில் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…