வெங்கட் பிரபுவை கண்ணாபின்னானு திட்டிய விஜய்.! கதை அப்படி போகுதா?
நடிகர் விஜய் தற்போது தனது 67-வது படமான ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை, அதற்குள் படத்தில் நடிக்கும் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் என்றும், படத்தின் தலைப்பு ‘சிஎஸ்கே’ என பல தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கெல்லாம் காரணம் வேற யாருமில்ல நம்ம வெங்கட் பிரபு தான். ஆம்….இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் ரசிகர்கள் இப்படத்தின் பற்றிய கேட்கும் கேள்விக்கு பதில் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் எந்த ஒரு விஷயத்தையும் வெளியிட கூடாது என்று விஜய் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திட்டிவிட்டாராம்.
இவ்வாறு இனிமேல் நடந்து கொண்டால், அடுத்த படத்தின் இயக்குனரை கூட மாற்றி விடுவேன் என்றெல்லாம் கூறினாராம். இவ்வாறு, நம்ப தக்க சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏன்னென்றால், லியோ படத்தின் பிஸினஸ் பெரிய அளவிற்கு இருப்பதால், இப்பொது அடுத்த படத்தின் பற்றிய தகவல்களை வெளியிடுவது நலத்துக்கு இல்லை. இது விஜய்யின் மார்க்கெட்டை கெடுத்துவிட கூடும் என கிசுகிசுக்கப்படுகிறது.