தளபதி –67 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 67 -வது திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்காலிமாக தளபதி 67 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ்உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், 7 ஸ்க்ரீன் நிறுவனம் வரிசையாக படத்தின் அப்டேட்டை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், கடைசியாக படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், தொலைகாட்சி உரிமையை சன் தொலைகாட்சி நிறுவனம் வாங்கியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து படத்திற்கான தலைப்பு நாளை வெளியிடபடும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை அறிவித்துள்ளனர். போஸ்டரில் விஜய் ரத்த கரையுடன் கொடூர லுக்கில் இருக்கிறார். எனவே படம் தரமான கேங்ஸ்டார் படமாக இருக்கும் என தெரிகிறது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…