விறுவிறு டப்பிங்கில் தளபதி விஜய்.! கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட லண்டன் பயணம்.!?
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். இதனை முடித்துவிட்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை லண்டன் சென்று கொண்டாட உள்ளாராம்.
தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் விறுவிறுவென தயாராகி வருகிறது. டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தறிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் இவை அனைத்தும் நமக்கு தெரிந்தவையே.
இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிட்டன. ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்கவேண்டியுள்ளதாம். விஜய் தற்போது பீஸ்ட் பட டப்பிங் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். டப்பிங் பணிகளை முடித்துவிட்டால் தளபதி விஜய் அடுத்த படத்திற்கான வேளைகளில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்.
அதற்கிடையில் அவர் வழக்கம் போல, ஒரு படம் முடிந்து வெளிநாடு செல்வது போல, இந்த முறையும் செல்ல உள்ளாராம். அதனால் தான் தனது டப்பிங்கை முடித்துவிட்டு, கிறிஸ்துமஸ் விடுமுறையை லண்டன் சென்று கொண்டாட உள்ளாராம்.