கேப்டன் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்! இது மட்டும் நடந்தா வேற மாறிதான்!

vijayakanth and vijay

சென்னை : விஜயகாந்த் குடும்பமே இன்ப அதிர்ச்சி ஆகும் வகையில், விஜய் ஒரு விஷத்தை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் ஆரம்ப கால திரைவாழ்க்கையில் ரொம்பவே சிரமம் பட்டுக்கொண்டு இருந்த சமயத்தில்  அவருக்காக விஜயகாந்த் ‘செந்தூரபாண்டி’  படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து உதவி செய்தார். விஜயகாந்த் நடித்த காரணத்தால் இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து விஜயின் பெயரும் வெளியே தெரிய அந்த சமயம் உதவியது. இது மட்டுமின்றி, விஜய் குடும்பத்திற்கும், விஜயகாந்த் குடும்பத்திற்கும் இடையே நல்ல பழக்க வழக்கமும் இருக்கிறது.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைந்த நிலையிலும், கூட அவரை ஏஐ மூலம் தன்னுடைய கோட் படத்தில் விஜய் மக்களுக்கு காமிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் AI மூலம் விஜயகாந்தை கேமியோ ரோலில் படக்குழு கொண்டுவரவிருக்கிறது. இதற்காக விஜயகாந்த் மனைவி பிரேமலதா சம்மதம் தெரிவித்தவுடன் மட்டுமின்றி பல உதவிகளையும் செய்து இருக்கிறாராம்.

கோட் படத்தில் விஜயகாந்த் வரும் காட்சியை பார்த்துவிட்டு பிரேமலதா நன்றாக இருப்பதாகவும் கூறியிருந்ததாகவும் ஏற்கனவே தகவல்களும் வெளியாகி இருந்தது. இதனையடுத்து விஜயகாந்த் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஜய் ஒரு விஷயத்தை செய்த வியப்பான தகவல் கிடைத்து இருக்கிறது.

சமீபத்தில், விஜய் விஜயகாந்த் குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது விஜய்காந்தின் மகன் சண்முகபாண்டியன் விஜயிடம் தான் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் டீசரை உங்களுடைய ட்வீட்டர் கணக்கில் போட்டு கொடுக்க முடியுமா? என்று கேட்டாராம். அதற்கு விஜய் இதெல்லாம் எதுக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்று என்னிடம் சொல்லுங்கள்.

கண்டிப்பாக சொல்லுங்கள் நான் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தருகிறேன் என்று கூறினாராம். ஜூலை மாதம் படைத்தலைவன் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு விஜய் வருகை தரவுள்ளதாகவும் இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்து இருக்கிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இது மட்டும் நடந்தா  வேற மாறிதான் என கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்