நாளை வெளியாகவுள்ள சர்கார் …!இன்று முதலே ட்விட்டரில் ட்ரென்டிங் கணக்கை தொடங்கிய விஜய் ரசிகர்கள் …!
நாளை டீசர் வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நாளை டீசர் வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் #SarkarTeaserTomorrow என்ற ஹஸ்டக் இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும் ,சென்னை யில் இரண்டாவது இடத்திலும் ட்ரென்டிங்கில் உள்ளது.