150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாத காலமாக வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் ஏழை எளிய மக்கள் பலர் ஒரு வேலை உணவின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபலங்கள் பலரும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய், கொரோனா நிதியுதவியாக 1.30 கோடி வழங்கியுள்ளதையடுத்து, ஏழைமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக, ரசிகர் மன்றத்திற்கு நிதி வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, கும்பகோணம் விஜய் ரசிகர்கள் சார்பாக 150 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025