Vijay [file image]
புதுச்சேரி : விஜயின் சினிமா பயணம் ஒரு பக்கம் மும்மரமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் அவருடைய அரசியல் வேலைகளும் மும்மரமாக நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது விஜய் தன்னுடைய 28-வது படமான கோட் படத்தில் நடித்து முடித்துவிட்டார் அடுத்ததாக தன்னுடைய 69-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய் நடிக்கவுள்ள அந்த 69-வது படம் தான் அவருக்கு கடைசி படம். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார். அவருடைய கவனம் சினிமாவில் தற்போது இருந்தாலும் கட்சியின் பொது செயலாளர் மற்றோரு பக்கம் அரசியல் தொடர்பான வேலைகளையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு பிரமாண்டமாக நடத்துவதற்கான வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது. முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இருப்பினும், இன்னும் மாநாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை விரைவில் அறிவிக்கப்டும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், விஜய் சைலண்டாக புதுச்சேரியில் பிரமாண்டமான மால் ஒன்றை கட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. பல கோடிகள் செலவும் பிரமாண்டமாக கட்டி வரும் அந்த மாலில் கிட்டத்தட்ட 6 சினிமா தியேட்டர்கள் வணிக வளாகங்கள் இடம்பெற உள்ளதாம். இந்த புதிய தகவலை சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை விட்டு விஜய் புதுச்சேரியில் மால் கட்டுவதற்கான காரணத்தையும் பேசியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் ” புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமிக்கும் விஜய்க்கு இடையே நல்ல பழக்கம் வழக்கம் இருக்கிறது. இருவரும் கடந்த ஆண்டு கூட சந்தித்து இருந்தார்கள். அதைப்போல, தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். இதன் காரணமாக தான் அவர் அங்கு மால் காட்டுகிறார்” என்கிறார் பயில்வான் ரங்கநாதன் .
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…