தளபதி 68 படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட விஜய்! என்ன தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது இய்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு, பிரபுதேவா, சினேகா, ஜெயராம், லைலா, உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தினை கல்பாத்தி எஸ்.சுரேஷ், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி அகோரம் ஆகியோர் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் மூலம் தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது.
அங்கு படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சில நாட்கள் தொடங்கும் அதுவரை படக்குழு ஓய்வெடுத்துவிட்டு வருவார்கள் என கூறப்பட்டது. ஆனால், விஜய் தற்போது படக்குழுவுக்கு அதிரடியான அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அது என்னவென்றால், தளபதி 68 படப்பிடிப்பை சீக்கீரம் முடிக்கவேண்டும் என்று தானாம்.
சூர்யாவுக்கு துரோகம் செய்தவர் அவர்! அமீரை கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்!
தாய்லாந்தில் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஓய்வெல்லாம் பிறகு எடுத்துக்கொள்வோம் இப்போது சீக்கிரமாக பட பிடிப்பை முடிப்போம் என்று கூறிவிட்டாராம். எனவே, நாளை படத்திற்கான அடுத்த கட்டப்படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெறவிருக்கிறதாம். அங்கு எல்லா நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்க படவுள்ளதாவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில், தளபதி 68 படத்திற்கான முதல் பாடல் குறித்தும் ஒரு தகவல் பரவியது. அது என்னவென்றால், தளபதி 68 படத்தின் முதல் பாடல் பேப்பியான பாடல் என்றும் அந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதி இருப்பதாகவும் யுவன் இசையில் அந்த பாடலை அனிருத் பாடியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அது மட்டுமின்றி அந்த பாடல் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025