விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் டி.இமான்…!!!
‘விஜயா புரொடக்சன்ஸ் ‘ நிறுவனம் தயாரித்த, ‘ ஸ்கெட்ச் ‘ படத்தை இயக்கிய விஜய்சுந்தர இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி. 2019 ஜனவரியில் இந்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விஜய்சேதுபதி நடித்த ‘ கருப்பன் ‘, ‘ றெக்கை ‘ முதலான படங்களுக்கு ஏற்கனவே இசை அமைத்துள்ள டி.இமான், இப்பொது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இந்தப்படத்தில் இணைந்துள்ளார்.