விஜய் சேதுபதி கோவப்பட்டு இந்த விசயத்துல தான் பாத்துருக்கேன்…!!!
விஜய் சேதுபதி எளியவர்களை மதித்து நடக்க கூடிய குணம் கொண்ட ஒரு நடிகர். இந்த குணத்தினாலேயே பலருக்கு இவரை பிடிக்கிறது. இந்நிலையில் இவர் தனது 25வது படத்தை நிறைவு செய்ததற்காக இவருக்கு ஒரு சிறிய நிகழ்ச்சி ஓனர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரமேஷ் திலக், விஜய் சேதுபதி குறித்து பேசினார். அப்போது ஒருநாள் அவர் சேதுபதியின் ஆபிசில் இருந்தபோது, ஒரு தயாரிப்பாளர் வந்தாராம். படம் தயாரிப்பதற்காக கூறிக்கொண்டு இருக்கும் போது, அவர் ” தம்பி நீங்க எந்த ஆளுங்க ” என்று கேட்டுள்ளார்.
உடனே கோபம் கொண்ட சேதுபதி,’ எந்திரிச்சி வெளிய போயா, நீ எனக்கு படம் கொடுக்கிறியா, என் ஜாதிக்கு கொடுக்கிறியா?” என கோபமாக பேசியதை கூறி, அதை அவரால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.