விஜய் சேதுபதியை கடவுள் என்று கூறிய முக்கிய பிரபலம்!!!!!
விஜய்சேதுபதி சினிமாவிற்கு வந்த குறுகிய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற நடிகர்.இவரின் படங்கள் ஒவ்வொன்றும் சினிமாவில் தனி சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. மேலும் இவர் வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.
இவர் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.விஜய் சேதுபதி ஒரு வருடத்தில் அதிக படங்களை நடித்து விடுவார்.மேலும் தற்போது பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் ‘ பேட்ட ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.இந்நிலையில் பாடல்களுக்கு வீணை இசை அமைக்கும் ராஜேஷ் வைத்யா தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி மிகவும் நல்ல மனிதர்,அனைவருக்கும் உதவி செய்யும் மனம் உடையவர் மற்றும் அவர் ‘ என் கடவுள் ‘ என்று கூறியுள்ளார்.