“வள்ளி மயில்” திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் விஜய் ஆண்டனி.!

ValliMayil Vijay Antony

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சுசீந்திரன் இயக்கும் ‘வள்ளி மயில்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நோக்கி படக்குழு நகர்ந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளது.

vallimayilmovie
vallimayilmovie [Image source : file image]

திண்டுக்கல்லில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி, கொடைக்கானல், தேனி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது.

விஜய் ஆண்டனியைத் தவிர, வள்ளி மயிலில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராமப்புற பொழுதுபோக்கு படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

நல்லுசாமி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்படும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார் மற்றும் லெவெல்லின் ஆண்டனி கோன்சால்வ்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். இதற்கிடையில், வள்ளி மயிலின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. மேலும், படத்தின் டீசர், இசைவெளியீட்டு விழா குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்