“ஏற்கனவே அனகோண்டானு சொல்லி வச்சு செஞ்சிட்டாங்க” விழுந்து விழுந்து சிரித்த விஜய் ஆண்டனி!
மதகஜராஜா வெற்றி விழாவில் டிராகன் மீம் பார்த்தவுடன் மாரி மாரி சிரித்துக்கொண்ட விஷால், விஜய் ஆண்டனி.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் “மதகஜராஜா” திரைப்படம் 12 வருடங்களுக்கு பின், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில், சென்னையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்பொழுது, படம் வெற்றி குறித்து சில மீம்ஸ்கள் ஸ்க்ரீனில் போட்டு நடிகர்களிடம் அது பற்றி கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்பொழுது, மூன்று தலை கொண்ட டிராகன் கார்டூன் வடிவில் அமைக்கப்பட்ட புகைப்படத்தை போடு காமித்தனர்.
இதை பார்த்து என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு, அதனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் ஆண்டனி, மூன்று பாம்பை எப்படி போட்டீங்க.., “அதெப்படிங்க அப்படி போட்டீங்க?” என்றார். அது பாம்பு இல்லை… ட்ராகன் என்று தொகுப்பாளர் சொல்ல, அப்பவும் விடாமல் விஜய் ஆண்டனி சிரிக்க, ஏற்கெனவே என்னைய வச்சு செஞ்சுட்டாங்க… நீங்க வேற ஏங்க அப்பிடின்னு விஷால் சொல்லவும் அரங்கமே சிரித்தது.
“தனக்கு உடம்பு சரியில்லாத போதுதான் தன்னை நேசிக்கும் மனிதர்கள் யார்யார் என அறிந்து கொண்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். எனக்கு நரம்பு தளர்ச்சி, போதை பழக்கம் என சிலர் வதந்தி பரப்பினர். என் உடல்நலனில் பிரச்சனை இல்லை… நன்றாக இருக்கிறேன்.
மதகஜராஜா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் எனக்கு கடுமையான காய்ச்சல். என்னை நேசிப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டேன். நிலநடுக்கம் வந்தால் கூட பேட்டி செய்தியாக போடும் ஊடகங்கள், தனது கைநடுக்கத்தை கனடா வரை பரப்பியதாகவும் அவர் காமெடியாக கூறியுள்ளார். தன்னை உண்மையாக விரும்புபவர்களையும், வெறுப்பவர்களையும், இதன்மூலம் எளிதில் அறிந்து கொண்டதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
Thalaivan Mass Speech 🔥🔥🔥@VishalKOfficial #MadhaGajaRaja #Vishal pic.twitter.com/VoGvKhXZEL
— Vishal Fans Trends (@VishalTrends_) January 17, 2025
மேலும், தான் நடிக்க உள்ள அடுத்த படங்கள் குறித்து விஷால் பேசினார். அது பற்றி அவர் கூறுகையில், “கெளவுதம் வாசுதேவ் மேனன் உடன் எனது அடுத்த படம் உருவாகிறது. அடுத்ததாக துப்பறிவாளன் 2, அதற்கடுத்ததாக அஜய் ஞானமுத்து உடன் ஒரு படமும் நடிக்கவுள்ளேன்” என்றார்.