Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் . இந்த திரைப்படத்தில் மிர்னாலினி ராவ், விடிவி கணேஷ், யோகி பாபு, இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 11- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு ஒரு சிலருக்கு படம் பிடித்து இருக்கிறது. ஒரு பக்கம் பாசிட்டிவான விமர்சனங்களும் மற்றோரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்கள் என சேர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் எல்லா படங்களையும் விமர்சிப்பது போல இந்த ரோமியோ படமும் சரியானதாக இல்லை என்பது போல விமர்சித்து பேசி இருந்தார். அதற்கு விஜய் ஆண்டனி காட்டத்துடன் பதில் அளித்துள்ளார். பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் இருக்காதீர்கள்.
தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும்” என்று கூறியுள்ளார். அன்பே சிவம் திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் வெளியான சமயத்தில் கொண்டாடப்படவில்லை ஆனால், இந்த காலத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. எனவே, இந்த ரோமியோ படத்தையும் அப்படி ஆக்கிவிடவேண்டாம் என்று விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…