அந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் ஆண்டனி! உண்மையை உளறிய மேகா ஆகாஷ்!
விஜய் ஆண்டனி : தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வளம் வந்துகொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்ப காலத்தில் பல படங்களில் இசையமைத்து சில படங்களில் மட்டுமே நடித்து வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது அப்படியே மாறி சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து கொண்டு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அந்த வகையில், விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனுக்காக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குனர் விஜய் மில்டன், விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அப்போது அதில் கலந்து கொண்டு பேசிய நடிகை மேகா ஆகாஷ் விஜய் ஆண்டனி கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்த படத்தில் நான் விஜய் ஆண்டனி சாருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தின் கதையை கேட்பதற்கு முன்பு ஒன்லைன் கேட்டபோதே எனக்கு எதோ வலுவான பெரிய கதாபாத்திரம் என்பதை உணர்ந்துகொண்டேன். பிறகு கதையை கேட்டு முடித்த பின் ரொம்பவே பிடித்து இருந்தது. படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன்.
என்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த படத்தில் நல்ல கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது. எனக்காக இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தனது வாழ்க்கையில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். அதற்கு நான் இந்த நேரத்தில் அவருக்கும், இயக்குனர் விஜய் மில்டனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் விஜய் ஆண்டனி தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வாய்ப்புகள் வழங்கி அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விஷயத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்” எனவும் மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார்.