நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். அந்த அளவிற்கு அவர்களது ரசிகர்கள் ஆட்டம், பட்டம் என படத்தை கொண்டாடி விடுவார்கள். இப்படி இருக்கையில், இவர்கள் இவர்களின் திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் தமிழ்நாடே எப்படி கொண்டாடும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும்..?
கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும், விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது.
இதையும் படியுங்களேன்- அஜித் என்னோட புள்ள.. அவர மாதிரி குணம் யாருக்குமே இல்ல..பிரபல நடிகர் புகழாரம்.!
அதன்பிறகு இவர்கள் நடித்த எந்த திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவில்லை, இத்தனை தொடர்ந்து கிட்டத்தட்ட 8-ஆண்டுகளுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக சூடான சூப்பர் தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதன்படி, அஜித் நடித்து வரும் “துணிவு” திரைப்படமும், விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படமும் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் தினதன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் “வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதி முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். விரைவில் “துணிவு”படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…