Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார்.
நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல படங்கள் முக்கியமான படங்களில் இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ படத்தை கூறலாம். இந்த படம் இப்போது ரீ -ரிலீஸ் செய்யப்பட்டும் கூட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய் கலகப்பான ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தால் விஜய் ரசிகர்களை தாண்டி மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு கூட படம் பிடித்து இருந்தது என்றே சொல்லலாம். ஆனால், விஜய் இந்த படத்தில் நடித்ததே இயக்குனர் ரஜினி நடித்த கதாபாத்திரம் ஒன்றை காட்டி அதைப்போல தான் நடிக்க சொன்னாராம்.
தம்பிக்கு எந்த ஊரு படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரத்தை விஜய்யிடம் காட்டி இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தை போல நீங்கள் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று இயக்குனர் தரணி கூறினாராம். இதற்கு முன்னதாக விஜய் அதிரடியான சண்டைகாட்சிகள் கொண்ட படத்தில் நடித்து இருந்தார்.
எனவே, விஜய்யை வேறு விதத்தில் காட்டவேண்டும் என்பதற்காகவே இப்படி விஜய்யை இயக்குனர் தரணி கில்லி படத்தில் நடிக்க சொன்னாராம். விஜய்யும் அதனை கேட்டுவிட்டு அப்படியே தரணி சொன்னதை உள்வாங்கி கொண்டு கில்லி படத்தில் நடித்தாராம். இந்த தகவலை இயக்குனர் தரணியே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…