படத்தின் பெயரை மாற்றிய விக்னேஷ் சிவன்.? LIKக்கு வந்த புதிய சோதனை.!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC என இருந்த படத்தின் தலைப்பை LIK (Love Insurance Kompany) என மாற்றியுள்ளனர். தற்போது, வெளியாகியுள்ள, போஸ்டரில் பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் கவனம் ஈர்த்துள்ளது.
Happy birthday dear @pradeeponelife
May you always be blessed immensely and shine as an unique star
forever
pic.twitter.com/1gq1rMXAF3
— VigneshShivan (@VigneshShivN) July 25, 2024
LIC நிறுவனத்தின் அழுத்தத்தால் பெயரை மாற்றினார்களா? என்று தெரியவில்லை. ஏன்னென்றால், முன்னதாக படத்தின் தலைப்பு ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (Love Insurance Corporation) என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார், இந்தப் படத்தை நயன்தாரா மற்றும் எஸ்எஸ் லலித்குமார் தயாரித்துள்ளனர். இப்படத்தில் பிரதீப் தவிர கிருத்தி ஷெட்டி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.