அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து எந்த மாதிரி ஒரு கதையை படமாக இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியுள்ளது. அவர் சிறந்த இயக்குனர் என்பதாலும், அஜித்தின் தீவிர ரசிகர் என்பதாலும் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில். விக்னேஷ் சிவன் சமீபத்திய ஒரு பேட்டியில் அஜீத்தோடு பணியாற்றப் போகும் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியது ” என்னுடைய 100% பணியை அந்த படத்தில் கொடுப்பேன். அஜித் சாரை நான் திரையில் பார்த்து ரசித்து இருக்கேன். அவரை சந்திக்க 5 நிமிடம் கிடைத்தாலே ரொம்ப சந்தோசம். அவருடன் தினமும் பல மணி நேரங்கள் செலவழிக்க போகிறோம் என்பதும் மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. படத்தை தொடங்க ஆவலுடன் இருக்கிறேன்.
படத்தை அருமையாக கொடுக்கவேண்டும். அஜித் சாருக்கு அவ்வளவு ரசிகர்கள் உள்ளனர். அந்த ரசிகர்களுக்கு பிடித்தவாறு ஒரு தரமான ஒரு படத்தை கொடுக்கவேண்டும் என்பது தான் ஒரு டாஸ்க். தோனி சொல்லுற மாதிரி “ரிசல்ட்டை விட நீங்கள் செய்யும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்” அதே மாதிரி தான் வேலை செய்யவேண்டும்.
அஜித் சார் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் வாலி, முகவரி, மங்காத்தா, விஸ்வாசம், இதில் வாலி எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…