இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்திற்கு LIC ‘எல்.ஐ.சி’ ( Love Insurance Corporation) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நவீன காதலை மையக்கருவாக கொண்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் கடைசியாக ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார், அது மாபெரும் வரவேற்பு பெற்றதது.
இந்நிலையில், Love-ஐ விட்டுக்கொடுக்காமல் ‘லவ் டுடே’ வெற்றியை தொடர்ந்து காதல் மையமாக வைத்து எடுக்கப்படும் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் வகையில், இப்பொது, ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது குறித்து விக்னேஷ் சிவன் தனது X பக்கத்தில், ‘என் கனவு நனவாகும் படம்’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மறுபக்கம், பிரதீப் ரங்கநாதன் தனது X பக்கத்தில், மொத்த படக்குழுவுக்கும் நன்றியுடன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அனிருத் குறித்து தங்கள் பெரிய ரசிகன் என்றும், எப்போதும் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். உங்கள் இசையில் முதன்முறையாக நடிக்கப் போகிறேன் என்று உற்சாகமாக உள்ளது, இது போன்ற பல எதிர்பார்ப்புகளுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிநடை போடும் ஜோ! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவன் பற்றி குறிப்பிடுகையில், இதையெல்லாம் எப்படி சாத்தியம்? உங்களது நானும் ரவுடி தான் படத்தை நேசிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது, இதோ நான் உங்களுடன் வேலை செய்கிறேன், நிறைய அன்புடன் காத்திருக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…