AK62-வை நீக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன்…அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்.!

Default Image

இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் Bio-வில் இருந்து AK62-வை நீக்கிஉள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AK62

AK62 Movie
AK62 Movie [Image Source: Twitter ]

அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

AK62-வை நீக்கிய விக்னேஷ் சிவன்

Vignesh Shivan Removed AK62 From His Bio
Vignesh Shivan Removed AK62 From His Bio [Image Source: Twitter ]

AK62 படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ள நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் Bio-வில் இருந்து AK62-வை நீக்கி உள்ளார். அதனை நீக்கிவிட்டு WIKI6 என்று வைத்துள்ளார். இதன் மூலம் அஜித்தின் 62-வது படத்தை அவர் இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

AK62 இயக்குனர் யார்…?

magizh thirumeni ajith
magizh thirumeni ajith [Image Source: Twitter ]

எற்கனவே AK62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் தனது டிவிட்டரில் உள்ள AK62 BIO-வை நீக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் AK 62 திரைப்படத்தை தடம் படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்