பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் தமிழ் சினிமாவில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். துப்பாக்கி படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்தில் நடித்ததன் மூலம் இன்னுமே பிரபலமானார் என்றும் கூறலாம்.
தற்போது ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், வித்யுத் ஜம்வால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பிறந்தநாளில் இமயமலையில் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களைப் வெளியீட்டு இருந்தார். இப்படியான புகைப்படங்களை வெளியிட்டது குறித்து சிலர் விமர்சித்தும். சிலர் ஆதரவாகவும் பேசி வந்தனர்.
இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் வித்யுத் ஜம்வால் அந்த நிர்வாண புகைப்படங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நிர்வாணமாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு சொந்தமாக வேலை செய் வது மிகவும் பிடிக்கும். நான் விரும்பியபடி வாழ்க்கையை அனுபவிக்கிறேன். பிடித்த புத்தகத்தை படிக்க விரும்புகிறேன்.
ராயன் முதல் சியான் 62 வரை….எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் லைன் அப்!!
நான் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் இமைய மலையில் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு 7 முதல் 10 நாட்கள் வரை நான் இப்படி தனியாக வந்து தங்கியிருப்பது என்னுடைய பழக்கமாகவே மாறிவிட்டது. இதில் நான் பெருமைப்படுகிறேன். ஏன் எல்லோரும் நிர்வாணமாகி தனக்கென நேரம் ஒதுக்குவதில்லை? அப்படிச் செய்தால், உலகில் வெட்கப்படாத ஒரே நபர் நீங்கள் தான்.
நான் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டபோது என்னை பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. அதற்கு நான் இப்போது ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற விமர்சனங்கள் என்னை எந்த விதத்திலும் காயப்படுத்தாது ஏனென்றால் அது தன்னைப் பற்றிய ஒருவரின் கருத்து என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…
சென்னை: கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், தனியார் பேருந்து…
சென்னை: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, நேற்றைய…
சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும்…