Ghilli vidyasagar [file image]
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார்.
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ஒக்கடு’ படத்தை தமிழில் நடிகர் விஜய்யை வைத்து கில்லி என்ற பெயரில் இயக்குனர் சரண் ரீமேக் செய்து இருந்தார். இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விஜயின் மார்க்கெட்டை உயர்த்த பெரிய உதவியாக அமைந்தது என்றே கூறலாம். ஒக்கடு படத்தை விட கில்லி படத்திற்கு தான் அதிகமான வரவேற்பும் கிடைத்தது.
இந்த கில்லி படம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த திரைப்படமும் கூட. அந்த சமயம் முதல் தற்போது வரை இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி கூட இந்த திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் வெற்றியடைந்ததுக்கு கதை ஒரு பக்கம் காரணம் என்றால் மற்றோரு காரணம் படத்தின் இசை என்று கூறலாம். இந்த படத்தின் இசை அந்த அளவிற்கு படத்திற்கு பக்க பலமாக இருந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நல்ல பாடல்களையும், பின்னணி இசையையும் வித்யாசாகர் கொடுத்து இருந்தார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் வித்யாசாகர் கில்லி படத்தின் பாடல்கள் உருவான விதம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதலில் கில்லி படத்திற்கு நான் இசையமைக்க ஒப்பந்தம் ஆன போது தயாரிப்பாளர் எ.எம்.ரத்னம் என்னிடம் ஒக்கடு படத்தில் இருந்த 2 பாடல்களை மட்டும் அப்படியே எடுத்து தமிழில் போடவேண்டும் என்று கூறினார்.
எனக்கு அப்படி எடுத்து பண்ணுவதில் சுத்தமாக விருப்பம் இல்லை அது தெலுங்கு பாட்டு தெலுங்கு பாட்டு வேண்டாம் நாம் தமிழில் புதிதாக பண்ணலாம் என்று கூறினேன். அதற்கு தயாரிப்பாளர் எ.எம்.ரத்னம் என்ன சார் இப்படி சொல்றீங்க? தெலுங்கில் அந்த பாடல்கள் எல்லாம் பெரிய ஹிட் என்று கூறினார். அதற்கு நான் அவரிடம் நீங்கள் தமிழில் செய்ய போவது அதனை விட பெரிய அளவில் ஹிட் ஆகா போகிறது காத்திருந்து பாருங்கள் என்று கூறினேன்.
நான் இவ்வளவு சொல்லியும் படத்தின் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. பிறகு எனக்காக அவர் ஒற்றுக்கொண்டார். நான் சொன்னது போல நல்ல பாடல்களை படத்தில் கொடுத்தேன். அப்படி போடு பாடலை எல்லாம் 30 நிமிடத்தில் முடித்து கொடுத்துவிட்டேன். பாடலும் இப்போது வரை கொண்டாடப்படுவது மகிழ்ச்சியை கொடுக்கிறது” எனவும் வித்யாசாகர் கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…