Categories: சினிமா

வெளியாகாத காட்சிகளுடன் இன்று OTT-யில் வெளியாகும் விடுதலை .!

Published by
கெளதம்

இயக்குனர் வெற்றிமாறன் தனது சமீபத்திய படமான விடுதலை பாகம் 1 மூலம் மற்றொரு சூப்பர்ஹிட்டைப் பெற்றார். இது ஒரு பீரியட் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும், இந்த படத்தில், நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்கில் வெளியாகி சில நாட்களுக்கு கழித்து, இன்று OTT-ல் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.

ViduthalaiPart1 in ZEE5Tamil [Image Source : Twitter/ @ZEE5Tamil]
இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பார்ட்னரான ZEE5 தமிழில் இன்று முதல் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதில், சிறப்பு அம்சம் என்னவென்றால், OTT பார்வையாளர்களுக்கு திரையரங்கில் நீக்கப்பட்ட கட்சிகளுடன் வெளியாக இருக்கிறது. மேலும், விரைவில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ViduthalaiPart1 IN Mega Blockbuster HIT [Image Source : Twitter/ @Soori]
இந்த படத்தின் கதை  அருமையாக இருந்ததால் படம் மக்களுக்கு பிடித்து போக படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் கண்டு கழித்தனர். அந்த வகையில், படத்தில் நடித்த நடிகர்களும் அருமையாக நடித்திருந்தார்கள் என்றே கூறலாம். அதன்படி, விடுதலை படம்  உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ViduthalaiPart1 – Now Streaming in ZEE5Tamil [Image Source : Twitter/ @Soori]
விடுதலை:

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘விடுதலை’ படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை அளித்ததால், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

43 minutes ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

2 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

3 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

3 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

4 hours ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

5 hours ago