“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

Viduthalai Part 2 Movie Twitter Review

சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பட்டியலில் இருந்து வருகிறது. அந்த பட்டியலில் கடைசியாக விடுதலை முதல் பாகம் இணைந்தது. தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.

முதல் பாகம் முடிவடையும் போது படத்திற்கான இரண்டாவது பாகமும் உருவாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்ப்போம்…

படம் பார்த்த ஒருவர் ” வெற்றிமாறனின் கைவினை மற்றும் கருத்தியல் ஒருபோதும் ஏமாற்றமடையாது. விஜய் சேதுபதி கதாபாத்திரம் அருமையாக இருக்கிறது. சூரி. ராஜீவ் மேனன் & கென் கருணாஸ் கதாபாத்திரங்கள் மிகவும் அருமை. அற்புதமான மற்றும் தீவிரமான ஆரம்ப 30 நிமிட அமைப்பு. அழகான பாடல்கள், பவர்ஃபுல் டயலாக்குகள் இடம்பெற்றுள்ளது” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “விடுதலைப் 2 படம் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று. ஒவ்வொருவரும் அரசியலாக்கப்படுவது முக்கியம், இந்த படம் அந்த புள்ளியை தவறாமல் அழுத்தமாக சொல்லியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கும் முன் முதல் பாகத்தை மீண்டும் பார்க்கவும், ஏனெனில் இது ஒரு ஒருங்கிணைந்த கதை” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “விடுதலை பாகம்2 படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி  தேசிய விருதுக்கு தகுதியானவர். அவரது திரைப்படங்களில் இதுவரை அவரது சிறந்த நடிப்பு மற்றும் 2024-இல் ஒட்டுமொத்தமாக சிறந்தது.ஆனால், தேசிய விருது கமிட்டி எப்படி செயல்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த திரைப்படத்தின் கருப்பொருளை அவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “விடுதலை 2 விமர்சனம் படத்தில் விஜய் சேதுபதி வந்ததில் இருந்து 45 நிமிடங்கள் அருமையாக இருந்தது. படம் நன்றாக இருந்தது. ஒரு முறை பார்க்கலாம்” என தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

மற்றொருவர் “விடுதலை 2 ஆழமாக எதிரொலிக்கும் சக்திவாய்ந்த மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கதைக்களத்தை கொண்ட படம். வெற்றிமாறனின் தலைசிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. அவருடைய விவேகமான சித்தாந்தமும், அசைக்க முடியாத அரசியல் கருத்தும் இந்தப் படத்தை மறக்க முடியாததாக ஆக்குகிறது” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan