சூரி : விடுதலை முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் 3 மடங்கு பயங்கரமாக இருக்கும் என சூரி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, மற்றும் நடிகை பவானி ஸ்ரீ, அப்புக்குட்டி, கௌதம் வாசுதேவ் மேனன், ஆர். வேல்ராஜ், சேத்தன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “விடுதலை”. இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
படத்தினுடைய முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்ற காரணத்தால் அதனை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகமும் உருவாக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாவது பாகத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது, இருப்பினும், இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்த பாடு இல்லை என்று தான் சொல்லவேண்டும். விரைவில் படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விடுதலை 2 திரைப்படம் பற்றி சமீபத்தில் கருடன் படத்தின் ப்ரோமோஷன்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய சூரி ” விடுதலை 2 நன்றாக உருவாக்கப்பட்டு வருகிறது. படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், இப்போது நான் கேமராவுக்காக சொல்லவில்லை உண்மையில் சொல்கிறேன். விடுதலை முதல் பாகத்தை விட 2-வது பாகம் 3 மடங்கு பயங்கரமாக இருக்கும். அந்த அளவுக்கு படம் ஹிட் ஆகும். கண்டிப்பாக எல்லாருக்கும் சந்தோஷம் கொடுக்கும் வகையில், படம் இருக்கும்” எனவும் சூரி தெரிவித்துள்ளார். சூரி கூறியதை பார்த்துவிட்டு பலரும் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புடன் கேட்டு வருகிறார்கள். மேலும், சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…