தலையில் மண்டை ஓட்டை ஏந்தியவாறு வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை!
நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு நிற உடை அணிந்து, தலையில் மண்டை ஓட்டை ஏந்தியவாறு எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு
ள்ளார்.