பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?
விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியிட்டில் இருந்து தள்ளிச்சென்ற நிலையில் அதே தேதியில் பல படங்களை ரிலீஸ் செய்ய படங்களின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் வெளியீட்டு தேதி பிந்திய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது 2025 ஜனவரி மாத இறுதியில் வெளியீடு காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ள நிலையில், அதே தேதியில் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்வதற்கு அந்தந்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தினை அதே தேதியில் ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட அந்த தேதியில் படத்தினை ரிலீஸ் செய்ய உறுதியான முடிவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் விடாமுயற்சி படத்தின் தமிழக திரையரங்கு வெளியிட்டு உரிமையை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் விடாமுயற்சி படம் தானே போனது நம்மகிட்ட இன்னொரு படம் இருக்கு என மற்றோரு படத்தை அதே தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அது என்ன படம் என்றால் இயக்குநரும், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவியை வைத்து இயக்கியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தை தான். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எனவே, இந்த படத்தை ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.