‘மாஸ்’ நடையில் அஜித் ..! வெளியானது ‘விடாமுயற்சி’ ஃபர்ஸ்ட் லுக்!!

Vidamuyarchi First Look

விடாமுயற்சி : இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் “விடாமுயற்சி”. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்றது.

நேற்று வரை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டாக படத்தின் பெயரை தாண்டி எதுவும் வெளியாகமல் இருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித் தொடர்புடைய காட்சிகள் மட்டும் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இன்று (ஜூன் 30ம் தேதி) மாலை வெளியாகும் என அஜித்தின் செய்தி தொடர்பாளரான சுரேஷ் சந்திரா நேற்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அந்த போஸ்டரில், அஜித் கையில் ஒரு பையை தூக்கி கொண்டு, கூலிங் க்ளாஸ் அணிந்து, கம்பீரமான நடையில் நடந்து வருவது போல ஒரு ஸ்டில்லை படக்குழு ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியானவுடன் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருவதுடன் அந்த போஸ்டரை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்