VidaaMuyarchi : வந்துவிட்டது விடாமுயற்சி அப்டேட்! பெருமூச்சு விட்ட அஜித் ரசிகர்கள்!
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கான அறிவிப்பு மட்டுமே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன்பிறகு அஜித் தன்னுடைய பைக் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டு வந்த காரணத்தால் விடாமுயற்சி படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் ஒரு வேலை தொடங்காமல் அஜித் பைக்கில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளாரா? எனவும் கேள்விகள் எழுந்துகொண்டு இருந்தது. இந்த நிலையில் அது அனைத்திற்கும் ஒரே பதிலாக கிடைக்கும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சஞ்சய் தத்தும் நடிகர் அஜித்குமாரும் இருக்கிறார்கள். ஏற்கனவே சஞ்சய் தத் விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவிருந்ததாக தகவல்கள் பரவி கொண்டு இருந்த நிலையில், தற்போது சஞ்சய் தத் துபாயில் அஜித்தை சந்தித்துள்ளார். இதன் மூலம் படத்தில் சஞ்சய் தத் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்டுகிறது.
மேலும், விடாமுயற்சி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்கி இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளதாம். அங்கு சில பாடல் காட்சிகளுடன் படத்தை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நீண்ட மாதங்களாக எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த காரணத்தால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, தற்போது அஜித்துடன் சஞ்சய் தத் துபாயில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருவதால் உற்சாகதுடன் பெருமூச்சுவிட்டுள்ளனர். மேலும், விரைவில் இந்த திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த மற்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.