விடாமுயற்சியின் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? இதுக்கு துணிவு எவ்வளவோ மேல்…

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விடாமுயற்சி' படம் பார்த்த பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

VidaaMuyarchi

சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இறுதியாக நேற்று (பிப்ரவரி 6) திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் சென்னையில் மட்டும் சுமார் ரூ.2.3 கோடி வசூல் செய்துள்ளதாக வெளிவந்துள்ளது.

ஆனால், இந்தப் படம் அஜித்தின் முந்தைய வெளியீடான துணிவுவின் முதல் நாள் வசூலை கூட முறியடிக்க முடியவில்லை. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சாக்னில்க் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்திய அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.22 கோடி வரை வசூல் செய்திருக்கும் எனப்படுகிறது. அதில், அதிகபட்சமாக தமிழில் ரூ.21.5 கோடி வசூலித்தது. தெலுங்கிலும் வெளியான இந்தப் படம் ரூ.0.5 கோடி வசூலித்து மொத்தமாக 22 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

முதல் நாளில் தமிழ் வசூலில் 59.54% வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தி வசூலில் 11.43% வசூல் செய்திருந்தாலும், தெலுங்கு வசூலில் இதுவரை ரூ. 12.99% வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அஜித்தின் முந்தைய படமான துணிவுவின் முதல் நாள் வசூலை முறியடிக்க முடியவில்லை. துணிவு படம் கூட முதல் நாளில் இந்தியாவில் ரூ.24.4 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பேங்கில் நடக்கும் கொள்ளை முன்னிறுத்தி எடுத்திருந்தாலும், அதில் அஜித் அனைவரையும் கவர்ந்தார்.

விடாமுயற்சி

விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார், லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. கடத்தப்பட்ட மனைவியை மீட்க நாயகன் மேற்கொள்ளும் போராட்டமே விடாமுயற்சியின் கதை. அஜித் வழக்கம் போல் தன் பெர்பாமன்சால் படத்தை தாங்குகிறார். மற்றபடி அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் சரியாக நடித்துள்ளனர். அனிருத்தின் இசை படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price