விடாமுயற்சி :மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 % முடிந்துவிட்டதாகவும், படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட தயாரிப்பாளர்கள் விடாமுயற்சி படத்தினை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியானது.
அந்த சூழலில் தான், விடாமுயற்சி படத்திற்கான முதல் லுக் போஸ்டர் கூட வெளியாகியும் இருந்தது. இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவலின் படி, விடாமுயற்சி படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவது என்பது சந்தேகம் தானாம். ஏனென்றால், படத்தினை தீபாவளி பண்டிகைக்கு பிறகு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.
தீபாவளி பண்டிகையில் இருந்து விடாமுயற்சி படம் விலகி உள்ள காரணத்தால் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தினை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை சினிமா தகவலை தெரிவிக்கும் யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…