விடாமுயற்சி : இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் எதாவது ஒரு அப்டேட் வெளியாகுமா? என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது விடாமுயற்சி படம் பெற்றி பேசி அப்டேட் கொடுத்துள்ளார்.
அர்ஜுனுடைய மகளுக்கும் தம்பி ராமையின் மகனுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்தை தொடர்ந்து சென்னையில் இரு வீட்டார் குடும்பமும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் விடாமுயற்சி படம் விரைவில் முழுவதுமாக முடிந்துவிடும் என்ற தகவலை தெரிவித்தார்.
விடாமுயற்சி படம் குறித்து அவர் பேசியதாவது ” இந்த மாதம் எனக்கு விடாமுயற்சி படப்பிடிப்பு இருக்கிறது. இன்னும் 20 %, 30 % மட்டும் தான் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. அதன்பிறகு முழுவதுமாக படப்பிடிப்பு முடிந்துவிடும். எல்லாத்தையும் இப்போது சொல்ல முடியாது. ஆனால், இந்த படம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். கண்டிப்பாக பாருங்கள்” எனவும் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிக்கப்ட்டு 1 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் இல்லை என்றால் வேறு அப்டேட் எதாவது படத்தில் இருந்து வருமா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து சோகத்தில் இருந்தார்கள். இந்த சூழலில் அர்ஜுன் படத்தை பற்றி பேசி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…