ஆபாச ஓடிடி டூ ஆன்மிக ஓடிடி! ‘ULLU’ நிறுவனத்தின் அடுத்த அதிரடி முடிவு.!

Published by
பால முருகன்

சென்னை : ULLU என்ற ஆபாச ஓடிடி தளத்தின் நிறுவனர் விபு அகர்வால் புதிய ஆன்மிகம் ஓடிடி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இன்றயை காலகட்டத்தில் ஓடிடி என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதன் காரணமாகவே, புது புது ஓடிடி தளங்களும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், ஆன்மிகம் போன்ற விஷயங்களை மக்களுக்கு அனிமேஷன் மூலமாகவும் காமிப்பதற்காக “ஹரி ஓம்” (hari om) என்ற பெயரில் புதிய ஓடிடி வருகிறது.

ULLU என்ற ஆபாச ஓடிடி தளத்தின் நிறுவனர் விபு அகர்வால் தான் இந்த “ஹரி ஓம்” (hari om)  ஓடிடியை தொடங்கி இருக்கிறார். மூத்த குடிமக்கள், குழந்தைகள், இளம் வயதினர் என அனைத்து |தரப்பினரும் பார்க்கும் வகையில் வீடியோ மற்றும் ஆடியோ முறையில் பஜனைகள், அனிமேஷன் வடிவில் புராணக்கதைகள் என பல விஷயங்கள் ஆன்மிகம் குறித்து இந்த ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

‘U’ சான்றிதழ் இந்த ஓடிடிக்கு கொடுக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகளும் இந்த ஓடிடியில் ஒளிபரப்பாகும் விஷயங்களை பார்க்கலாம். மேலும், இந்த ஹரி ஓம், ஓடிடியில் வரும் ஜூன் மாதம் 20 க்கும் மேற்பட்ட புராண நிகழ்ச்சிகளின் வரிசையுடன் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

hari om ஓடிடி தளம் தொடங்குவது குறித்து பேசிய நிறுவனர் விபு அகர்வால்  ” இந்தியர்களாகிய நாம், நமது கலாச்சாரம், பாரம்பரியம் கொள்வது அவசியம். நமது இந்திய புராணங்களை ஆராய்வதற்கான மூத்த குடிமக்கள், இளைஞர்கள், குழந்தைகள், ஆகியோர் தெரிந்துகொள்ள இந்த ஓடிடி தொடங்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு தேசிய மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

DC vs MI : வெற்றிப் பாதையில் மும்பை.., முதல் தோல்வியில் டெல்லி! முக்கிய சம்பவங்கள் இதோ…DC vs MI : வெற்றிப் பாதையில் மும்பை.., முதல் தோல்வியில் டெல்லி! முக்கிய சம்பவங்கள் இதோ…

DC vs MI : வெற்றிப் பாதையில் மும்பை.., முதல் தோல்வியில் டெல்லி! முக்கிய சம்பவங்கள் இதோ…

டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…

4 minutes ago
RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

12 hours ago
ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

13 hours ago

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

14 hours ago

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

16 hours ago

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

17 hours ago