ஆபாச ஓடிடி டூ ஆன்மிக ஓடிடி! ‘ULLU’ நிறுவனத்தின் அடுத்த அதிரடி முடிவு.!

சென்னை : ULLU என்ற ஆபாச ஓடிடி தளத்தின் நிறுவனர் விபு அகர்வால் புதிய ஆன்மிகம் ஓடிடி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இன்றயை காலகட்டத்தில் ஓடிடி என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதன் காரணமாகவே, புது புது ஓடிடி தளங்களும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், ஆன்மிகம் போன்ற விஷயங்களை மக்களுக்கு அனிமேஷன் மூலமாகவும் காமிப்பதற்காக “ஹரி ஓம்” (hari om) என்ற பெயரில் புதிய ஓடிடி வருகிறது.
ULLU என்ற ஆபாச ஓடிடி தளத்தின் நிறுவனர் விபு அகர்வால் தான் இந்த “ஹரி ஓம்” (hari om) ஓடிடியை தொடங்கி இருக்கிறார். மூத்த குடிமக்கள், குழந்தைகள், இளம் வயதினர் என அனைத்து |தரப்பினரும் பார்க்கும் வகையில் வீடியோ மற்றும் ஆடியோ முறையில் பஜனைகள், அனிமேஷன் வடிவில் புராணக்கதைகள் என பல விஷயங்கள் ஆன்மிகம் குறித்து இந்த ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
‘U’ சான்றிதழ் இந்த ஓடிடிக்கு கொடுக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகளும் இந்த ஓடிடியில் ஒளிபரப்பாகும் விஷயங்களை பார்க்கலாம். மேலும், இந்த ஹரி ஓம், ஓடிடியில் வரும் ஜூன் மாதம் 20 க்கும் மேற்பட்ட புராண நிகழ்ச்சிகளின் வரிசையுடன் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
hari om ஓடிடி தளம் தொடங்குவது குறித்து பேசிய நிறுவனர் விபு அகர்வால் ” இந்தியர்களாகிய நாம், நமது கலாச்சாரம், பாரம்பரியம் கொள்வது அவசியம். நமது இந்திய புராணங்களை ஆராய்வதற்கான மூத்த குடிமக்கள், இளைஞர்கள், குழந்தைகள், ஆகியோர் தெரிந்துகொள்ள இந்த ஓடிடி தொடங்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு தேசிய மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.