VadaChennai poster [File Image]
தமிழ் சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும் அதில் தலை சிறந்த படங்களில் ஒரு சில படங்கள் இருக்கும். அதில் குறிப்பாக இருக்கக்கூடிய படம் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஜெர்மியா, கிஷோர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தர்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை உண்டு செய்தது என்று கூட கூறலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு ஒரு தரமான கேங்ஸ்டர் திரைப்படத்தை கொடுத்து வெற்றிமாறன் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தார் என்றே கூறலாம்.
இந்நிலையில் வடசென்னை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகளை எடுத்து வெளியிட்டு தமிழ் சினிமாவில் தரமான படைப்பு எனவும் வெற்றிமாறனின் சூப்பர் சம்பவம் எனவும் கூறி வருகிறார்கள்.
அந்த படத்துக்கு பிறகு ‘வடசென்னை 2’ தான்…அசத்தல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்.!
இந்த நிலையில் படம் எத்தனை கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது உலகம் முழுவதும் இந்த திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். வடசென்னை திரைப்படம் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் ஆனது.
இதனை வருடங்கள் கடந்தும் தமிழ் சினிமாவில் பேசும் திரைப்படமாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வடசென்னை 2-வது பாகம் உருவாகவுள்ளது. விரைவில் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பும் வெளியாகவிருக்கிறது. வடசென்னை முதல் பாகத்திலேயே அன்புவின் எழுச்சி வடசென்னை 2-வில் தொடரும் என வரும். எனவே கண்டிப்பாக வடசென்னை 2 திரைப்படமும் எடுக்கப்படவுள்ளது.
மேலும், வடசென்னை திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 12ஆம் தேதி சில திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வசூலில் மிரள வைத்து டிக்கெட் புக்கிங்கிழும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…